சமையலறை

உடனடி கிரேவி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

கேரட் - 2

பச்சைப் பட்டாணி - 4 டேபிள் ஸ்பூன்

வெங்காயம், தக்காளி – தலா ஒன்று

பூண்டு - 3 பல்

மிளகாய்த் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

அரைக்க

சோம்பு - அரை டீஸ்பூன்

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

பச்சை மிளகாய் - ஒன்று

தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்

பொட்டுக்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

அடி கனமான வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு பூண்டு, தக்காளி இரண்டையும் சேர்த்து வதக்கி, கேரட்டைப் போட்டு வதக்கிக்கொள்ளுங்கள். ஒரு கப் தண்ணீர் விட்டு, தேவையான அளவு உப்பு, பச்சைப் பட்டாணி ஆகியவற்றைச் சேர்ந்து மூடிவைத்து வேகவையுங்கள். காய்கள் வெந்ததும் அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்துச் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி மல்லித் தழை தூவிப் பரிமாறுங்கள். இந்த கிரேவி சப்பாத்தி, இட்லி, தோசை உள்ளிட்ட டிபன் வகைகளுடன் சாப்பிட ஏற்றது.


ராஜகுமாரி

SCROLL FOR NEXT