சமையலறை

உக்காரை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

பாசிப் பருப்பு,

கடலைப் பருப்பு – தலா ஒரு கப்

வெல்லம் - 2 கப்

நெய் -3 டீஸ்பூன்

முந்திரி, திராட்சை,

ஏலக்காய்த் தூள்- தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வெறும் வாணலி யில் பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்துக்கொள்ளுங் கள். இவற்றை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துப் பின் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி குக்கரில் வேகவைத்து, ஆறியதும் உதிர்த்துக்கொள்ளுங்கள். வெல்லத்தைக் கம்பிப் பாகு பதத்தில் காய்ச்சிக்கொள்ளுங்கள்.

வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்துக்கொள்ளுங்கள். அவற்றை உதிர்த்து வைத்திருக்கும் பருப்புடன் கலந்து, வெல்லப்பாகில் சேர்த்துக் கிளறுங்கள். ஏலக்காய்த் தூள் தூவி இறக்கினால் உக்காரை தயார்.

பிரேமா கார்த்திகேயன்

SCROLL FOR NEXT