என்னென்ன தேவை?
வெள்ளை மொச்சை - 100 கிராம்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - நான்கு பல்
வெங்காயம், தக்காளி - தலா ஒன்று
கெட்டித் தயிர் - அரை கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெள்ளை மொச்சையை ஆறு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறியதும் உப்பு சேர்த்து வேகவைத்துத் தனியே வையுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி வேகவைத்த மொச்சைக் கொட்டை, தயிர் சேர்த்து வதக்கி, தேவையான தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கிவைத்து, மல்லித் தழை தூவி அலங்கரியுங்கள். இதை புலவுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
ராஜகுமாரி