என்னென்ன தேவை?
மைதா - 2 கப்
ரவை, அரிசி மாவு - தலா அரை கப்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
எள் - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
காரப் பொடி - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மைதா, ரவை, அரிசி மாவு இவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள். வெண்ணெயை உருக்கி, இந்த மாவில் விட்டு, எள், பெருங்காயம், காரப் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவைச் சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுங்கள். கையில் லேசாக எண்ணெய் தடவிக்கொண்டால், வடை தட்டும் போது மாவு கையில் ஒட்டாது.
நினைத்தவுடன் செய்யக்கூடிய வடை இது. திடீர் விருந்தினர்களுக்கு இந்த வடையைச் செய்துகொடுத்து, அவர்களின் பாராட்டைப் பெறலாம். நாள்பட இருக்கும்.
- சீதா சம்பத்