சமையலறை

டார்க் சாக்லேட்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

மைதா மாவு - 300 கிராம்

வெண்ணெய் - 200 கிராம்

ஐசிங் சர்க்கரை - 200 கிராம்

முட்டை - 1

வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

ஐசிங் சர்க்கரை இல்லையென்றால் 180 கிராம் சர்க்கரையுடன் 3 டேபிள் ஸ்பூன் சோள மாவைச் சேர்த்துக்கொள்ளுங்கள். முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றுங்கள். மைதா மாவையும் ஐசிங் சர்க்கரையையும் ஒன்றாகச் சேர்த்து சலித்துக்கொள்ளுங்கள். இதை முட்டையுடன் சேர்த்து கரண்டியால் நன்றாகக் கலக்குங்கள். பிறகு குளிர்ந்த வெண்ணெயைச் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். வெண்ணெய் குளிர்ந்து, கெட்டியாக இருக்க வேண்டும்.

பிறகு வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்றாகப் பிசையுங்கள். இந்தக் கலவையை மெல்லிய டிரான்ஸ்பரன்ட் பேப்பரால் (cling wrap) சுற்றி ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுங்கள். பிறகு வெளியே எடுத்து, சிறிய நீள்வட்ட வடிவ தட்டையான பாத்திரத்தில் போட்டுப் பிசையுங்கள். கலவையைப் பாத்திரத்தின் விளிம்புவரை பரப்பி, ஆங்காங்கே முள்கரண்டியால் குத்திவிட வேண்டும்.

அப்போதுதான் சாக்லேட் குழிகள் இல்லாமல் வரும். பிறகு இதை மைக்ரோவேவ் அவன்-ல் 165 டிகிரி செண்டிகிரேட் வெப்பநிலையில் 15 முதல் 20 நிமிடங்கள்வரை பேக் செய்து எடுக்கவும். வெளியே எடுத்து விரும்பிய வடிவத்தில் துண்டுகள் போட்டு சுவைக்கலாம்.

SCROLL FOR NEXT