சமையலறை

வேர்க்கடலை உருண்டை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

வேர்க்கடலை - அரை கப்

வெல்லத் தூள் - அரை கப்

ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்

நெய் - 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

வேர்க்கடலையை வறுத்து, தோல் நீக்கி, சுத்தம் செய்யுங்கள். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து, கெட்டிப்பாகு காய்ச்சுங்கள்.

அதில் வேர்க்கடலையைக் கொட்டிக் கிளறுங்கள். நன்றாகக் கலந்ததும் வேறு பாத்திரத்துக்கு மாற்றுங்கள். கையில் சிறிது நெய் தடவிக்கொண்டு கலவையைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள்.

SCROLL FOR NEXT