சமையலறை

வாழைக்காய் தட்டை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

முற்றிய வாழைக்காய் - 1

அரிசி மாவு - 2 கப்

பொட்டுக்கடலை மாவு - ஒரு கப்

சோள மாவு - அரை கப்

மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிதளவு

வறுத்த நிலைக்கடலை - ஒரு கப்

வெண்ணெய் - 2 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாழைக்காயைத் தோலுரித்து, வேகவைத்துக்கொள்ளுங்கள். அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த் தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, வெண்ணெய் ஆகியவற்றுடன் வேகவைத்த வாழைக்காய், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்த மாவை மெல்லிய தட்டைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

- வரலட்சுமி

SCROLL FOR NEXT