சமையலறை

வரகரிசி பாயாசம்

செய்திப்பிரிவு

வரகரிசி - கால் கப்

வெல்லம் - கால் கப்புக்கும் குறைவாக

முந்திரி - 10

திராட்சை - 25

ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்

பால் - ஒரு கப்

நெய் - 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

கடாயில் நெய்விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து, தனியே எடுத்து வையுங்கள். அதே கடாயில் வரகரிசியை வறுத்து, தண்ணீர் சேர்த்து வேகவையுங்கள்.

வெந்த பிறகு வெல்லம் சேர்த்து, கொதித்துவரும்போது காய்ச்சிய பாலைச் சேர்த்துக் கலக்குங்கள். ஏலக்காய்ப் பொடி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கிவிடுங்கள்.

SCROLL FOR NEXT