என்னென்ன தேவை?
கோதுமை பிஸ்கட் - 10
சர்க்கரைப் பொடி - 2 கப்
பொட்டுக்கடலைப் பொடி - 1 கப்
குளூக்கோஸ் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்
பால்கோவா - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 10
நெய் - 1 கப்
எப்படிச் செய்வது?
கோதுமை பிஸ்கட்டைப் பொடித்துக்கொள்ளுங்கள். அதனுடன் சர்க்கரைப் பொடி, பொட்டுக்கடலைப் பொடி, ஏலக்காய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்குங்கள். முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துச் சேருங்கள். குளுக்கோஸ் தூளைச் சேருங்கள். நெய்யைச் சுடவைத்து ஊற்றி, நன்றாகக் கலக்குங்கள். பால்கோவாவைச் சேர்த்து நன்கு கலந்த பிறகு சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள். வித்தியாசமான இந்த பிஸ்கட் லாடு குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பிடிக்கும்.
உஷா