என்னென்ன தேவை?
அரிசி மாவு - ஒரு டம்ளர்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம், உளுந்து - தலா அரை டீஸ்பூன்
ஏலக்காய் - 2
அரிசி அல்லது கோதுமை மாவு - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெல்லத்தைச் சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து, கல், மண் போக வடிகட்டுங்கள். அரைத்த மாவை அதில் போட்டு கரையுங்கள். நீர்க்க இருந்தால் அரிசி மாவு அல்லது கோதுமை மாவு சேர்த்தால் கெட்டியாகிவிடும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கரைத்த மாவைக் கரண்டியில் அள்ளி அப்பமாக ஊற்றுங்கள். சிறு தீயாக இருந்தால் அப்பம் கருகாமல் பொன்னிறமாக வரும்.