சமையலறை

மிளகு - சீரக இடியாப்பம்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

அரிசி மாவு - ஒரு கப்

மிளகு, சீரகம் - ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் அல்லது நெய் - சிறிதளவு

முந்திரி - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசி மாவில் உப்பு சேர்த்து, அதில் சூடான தண்ணீரைச் சிறிது, சிறிதாக ஊற்றிக் குழைத்துக்கொள்ளுங்கள். இந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு, இடியாப்பத் தட்டில் பிழியுங்கள். இதை ஆவியில் வேகவையுங்கள்.

ஆறியதும் உதிர்த்துக்கொள்ளுங்கள். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றிச் சூடானதும் முந்திரி, மிளகு - சீரகப் பொடி, தேவையான அளவு உப்பு போட்டுக் கிளறுங்கள்.

இதை இடியாப்பத்தில் போட்டுக் கிளறுங்கள். எளிதில் ஜீரணமாகக் கூடிய சுவையான இடியாப்பம் இது.

SCROLL FOR NEXT