அரிசி, வெல்லம் - தலா முக்கால் டம்ளர்
தேங்காய் - 1 (துருவிக்கொள்ளவும்)
ஏலக்காய் - 5 அல்லது 6
எண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்து, மாவாக அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு வெல்லத்தைப் பொடித்துப் போடுங்கள். மண், தூசியை வடிகட்டி மீண்டும் கொதிக்கவிட்டு, தேங்காய்த் துருவல் போட்டு 10 நிமிடம் கிளறுங்கள். சிறிது கெட்டியானதும் ஏலப்பொடி போட்டுக் கிளறி இறக்குங்கள்.
தண்ணீரைக் கொதிக்கவைத்து மாவை அதில் போட்டுக் கிளறுங்கள். கை பொறுக்கும் சூட்டில் நன்றாகப் பிசைந்து, எண்ணெய் தொட்டுக்கொண்டு சொப்பு வடிவில் செய்து அதனுள் வெல்லப் பூரணம் வைத்து மூடி, தேங்காய்க் குடுமிபோல் பிடியுங்கள். இவற்றை இட்லித் தட்டில் வைத்து, வேகவையுங்கள்.