சமையலறை

காரச் சீடை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

அரிசி மாவு - 2 கப்

உளுந்து மாவு - கால் கப்

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

எள் - ஒரு டீஸ்பூன்

வெண்ணெய் - சிறிதளவு

தேங்காய்த் துருவல் - அரை மூடி தேங்காயில் எடுத்தது

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசி மாவு, உளுந்து மாவுடன், உப்பு, எள், பெருங்காயம், வெண்ணெய் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றிப் பிசையுங்கள். இந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வெள்ளைத் துணியில் போட்டு அரை மணி நேரம் உலர விடுங்கள். பிறகு சூடான எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள்.

SCROLL FOR NEXT