சமையலறை

நாரத்தங்காய் கறிவேப்பிலை கட்டி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

நாரத்தங்காய் இலை - கால் கிலோ

கறிவேப்பிலை - 100 கிராம்

புளி, பெருங்காயம், காய்ந்த மிளகாய் - தலா 10 கிராம்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கறிவேப்பிலை, நாரத்தங்காய் இலை இரண்டையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளுங்கள். இத்துடன் 10 மி.லி நல்லெண்ணெய், பெருங்காயம், காய்ந்த மிளகாய், உப்பு, புளி சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

இந்தக் கலவையைச் சிறு சிறு கட்டிகளாகப் பிடித்துவைக்கவும். மோர் சாதத்துக்குத் தொட்டுச் சாப்பிடலாம். ஜீரண சக்தி நிறைந்த இந்தக் கட்டியை ஓண விருந்துக்குப் பிறகு சாப்பிடுவார்கள்.

SCROLL FOR NEXT