சமையலறை

இலை அடை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

அரிசி மாவு - 1 கப்

துருவிய வெல்லம் - ஒரு கப்

தேங்காய்த் துருவல் - அரை கப்

ஏலக்காய் - 2

வாழையிலை - 1

உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசி மாவில் உப்பு சேர்த்து சூடான தண்ணீரை ஊற்றி, கொழுக்கட்டை மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளுங்கள். வெல்லத்தைப் பாகு காய்ச்சி ஏலக்காய், தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறி இறக்கிவையுங்கள். வாழையிலையில் எண்ணெய் தடவி, பிசைந்து வைத்திருக்கும் மாவை மெலிதாகத் தட்டுங்கள்.

நடுவே பூரணம் வைத்து இலையை மூடி ஆவியில் வேகவையுங்கள். வாழையிலையின் வரிகளுடனும் வாழை மணத்துடனும் இனிப்பு இலை அடை அருமையாக இருக்கும். பூரணம் செய்ய வாழைப்பழம், பலாச்சுளை ஆகியவற்றையும் சேர்க்கலாம். இனிப்பு விரும்பாதவர்கள், கார பூரணம் வைத்துக் கார இலை அடையும் செய்யலாம்.

SCROLL FOR NEXT