சமையலறை

வெண்டைக்காய், மாதுளை ராய்த்தா

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

கெட்டித் தயிர் - 1 கப்

நறுக்கிய வெண்டைக்காய் - அரை கப்

மாதுளை முத்துக்கள் - 1 டேபிள் ஸ்பூன்

பொடியாக நறுக்கிய மல்லித் தழை - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

எப்படிச் செய்வது?

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை நன்றாக வதக்கி, ஆறவிடவும். அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்துக்கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் தயிர், தேவையான உப்பு, அரைத்த விழுது, வதக்கிய வெண்டைக்காய், மாதுளை முத்துக்கள் சேர்த்து மல்லித்தழை தூவி நன்றாகக் கலக்கவும்.

SCROLL FOR NEXT