என்னென்ன தேவை?
மைதா - அரை கப்
கோதுமை மாவு, சோள மாவு - கால் கப்
எண்ணெய் 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பூரணம் செய்ய:
கடலைப் பருப்பு, வெல்லம் தலா அரை கப்
தேங்காய்த் துருவல் - அரை மூடி
முந்திரி - 6
ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்
நெய் தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மைதா, சோள மாவு, கோதுமை மாவு இவற்றுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசையவும். மேலே சிறிது எண்ணெய் தடவி, அரை மணி நேரம் மூடிவைக்கவும். கடலைப் பருப்பை முக்கால் பதத்துக்கு வேகவைத்து, நீரை வடிக்கவும். சிறிது நேரம் ஆறவைத்து அதனுடன் தேங்காய்த் துருவல், முந்திரி சேர்த்து நன்றாக அரைக்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். கரைந்ததும் வடிகட்டி அதனோடு அரைத்த பருப்புக் கலவையைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறி இறக்கவும்.
ஏலக்காய்த் தூள் சேர்க்கவும். கலவை ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறிதளவு எடுத்து அப்பளம்போல் தட்டி அதனுள் பூரண உருண்டையை வைத்து உருட்டி, அரிசி மாவில் தொட்டு சப்பாத்திபோலத் தேய்க்கவும். சூடான தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் நெய் விடவும். இருபுறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும். பூரண உருண்டையை மைதா மாவில் முக்கியெடுத்து, எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான சுகியன் தயார்