சமையலறை

கார சுண்டல்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

கொண்டைக்கடலை - ஒரு கப்

தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 1

பச்சை மிளகாய் - 2

பெருங்காயம் - அரை டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவையுங்கள். மறுநாள் உப்பு சேர்த்து குக்கரில் வேகவையுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து, வேகவைத்த கடலையை அதில் சேர்த்துக் கிளறுங்கள்.

தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து, பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிச் சேருங்கள்.

SCROLL FOR NEXT