சமையலறை

தலைவாழை: ஜாம் டோனட்ஸ்

செய்திப்பிரிவு

நிபந்தனையற்ற அன்பு காதலில்தான் சாத்தியம் எனப் பலர் நம்புவதைக் காதலர் தினக் கொண்டாட்டங்கள் நிரூபிக்கின்றன. மனத்துக்குப் பிடித்தவர்களுக்கு விருப்பமானதைச் சமைத்துத் தருவதும் காதல்தான் எனச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சுதா செல்வகுமார். ஆண், பெண் என்கிற பேதமின்றி இருவருமே தங்களுக்குப் பிடித்தவர்களுக்குச் சமைத்துத்தரும் வகையில் எளிய காதலர் தின சமையல் குறிப்புகளை அவர் தருகிறார்.

என்னென்ன தேவை?

மைதா - அரை கப்
கோதுமை மாவு
- அரை கப்
உலர் ஈஸ்ட்
- 1 டீஸ்பூன்
பால் - கால் கப்
சர்க்கரை
- 2 டேபிள் ஸ்பூன்
மிக்ஸட் ஜாம் - தேவைக்கு
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்கத்
தேவையான அளவு
பொடித்த சர்க்கரை - தேவைக்கு
வெண்ணெய் - 50 கிராம்

எப்படிச் செய்வது?

வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட்டைச் சேர்த்துக் கலக்கிவையுங்கள். பிறகு பாலை நன்றாகக் காய்ச்சி அதனுடன் வெண்ணெய், சர்க்கரை சேர்த்துக் கலந்து ஆறவிடுங்கள். மைதாவையும் கோதுமை மாவையும் ஒன்றாகக் கலந்து கலந்துவைத்துள்ள ஈஸ்ட்டைச் சேர்த்துப் பிசைந்து கொள்ளுங்கள். அதனுடன் பால் கலவையைச் சிறிது சிறிதாக ஊற்றிப் பிசையுங்கள். தேவையெனில் லேசாகத் தண்ணீர் தெளித்து, மாவு கையில் ஒட்டாத பதத்தில் பிசையுங்கள். ஈரத்துணியால் மாவை மூடி ஐந்து மணி நேரம் அப்படியே வையுங்கள்.
மாவு நன்றாக ஊறியதும் பெரிய பெரிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திக் கல்லில் டோனட் வடிவில் திரட்டிக்கொள்ளுங்கள். அவற்றை எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அவற்றின்மேல் ஜாம் தடவி, பொடித்த சர்க்கரையைத் தூவிப் பரிமாறுங்கள்.

SCROLL FOR NEXT