என்னென்ன தேவை?
சோறு - 1 கப்
உருளைக் கிழங்கு - 2
கடலை மாவு - 3 டீஸ்பூன்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு
மஞ்சள் பொடி, கரம் மசாலா - தலா அரை டீஸ்பூன்
இஞ்சி- பூண்டு விழுது, மிளகாய்த் தூள் - தலா 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
உருளைக் கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள். அதனுடன் சோறு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கடலை மாவு, கறிவேப்பில்லை, மல்லித்தழை, உப்பு, மஞ்சள் தூள் கரம் மசாலா, மிளகாய்த் தூள், இஞ்சி-பூண்டு விழுது, எலுமிச்சை சாறு ஆகியவற்றைச் சேர்த்துத் தண்ணீர் விடாமல் பிசையுங்கள். இந்தக் கலவையை எண்ணெய் தடவிய சதுர வடிவ தட்டில் பரப்புங்கள். பின்பு இதை இன்னொரு தட்டில் திருப்பிப்போடுங்கள். பிறகு கையால் சமப்படுத்திவிட்டு சதுர வடிவில் வெட்டி, தவாவில் போட்டு எண்ணெய் விட்டு வேகவிடுங்கள். இருபுறங்களும் திருப்பிப்போட்டுப் பொன்னிறமானதும் எடுங்கள்.