என்னென்ன தேவை?
துருவிய பீட்ரூட், நறுக்கிய வெங்காயம் - தலா 1 கப்
பூண்டு - 6 பல்
இஞ்சி - சிறிய துண்டு
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
சோள மாவு, அரிசி மாவு - தலா 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பீட்ரூட் துருவல், நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு இவற்றுடன் தேவையான அளவு மிளகாய்த் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். பிசைந்த கலவையை உங்களுக்குப் பிடித்த வடிவில் உருட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
மேகலா