சமையலறை

பீட்ரூட் சோயா கிரேவி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

நறுக்கிய பீட்ரூட் - அரைக் கப்

சோயா உருண்டைகள் - 10

வெங்காயம், தக்காளி - 1

இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்

கசகசா, முந்திரி அரைத்த விழுது - 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - அரை டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சோயா உருண்டைகளைக் கொதிநீரில் போட்டு, குளிர்ந்த நீரில் அலசிப் பிழிந்து துண்டுகளாக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அவை நன்றாக வதங்கியதும் பீட்ரூட், அரைத்த விழுது வகைகள், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும். நறுக்கிய சோயா, 1 டம்ளர் நீர் சேர்த்து 2 விசில் வைத்து இறக்கவும். குக்கரைத் திறந்து, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

மேகலா

SCROLL FOR NEXT