சமையலறை

இளநீர் தோசை ரோல்

செய்திப்பிரிவு

இத்தனை நாட்கள் வாய்க்கு ருசியாக உணவு கேட்டவர்கள்கூட அக்னி வெயிலுக்குப் பிறகு வயிற்றுக்குக் குளிர்ச்சியாகக் கேட்கிறார்கள். குளிர்ச்சியான உணவு வகைகள் என்றாலே கஞ்சி, சாலட் வகைகள் மட்டும்தான் என்பது பலரது நினைப்பு. ஆனால் அவற்றிலும் புதுமை படைத்து ருசிக்கலாம் என்று நம்பிக்கை தருகிறார் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த என். உஷா. அவர் கற்றுத் தருகிற உணவு வகைகளைச் சமைத்து, சுவைத்து அக்னி வெயிலிலும் உற்சாகமாக வலம் வருவோம்.

இளநீர் தோசை ரோல்

என்னென்ன தேவை?

அரிசி - 3 கப்

உளுந்து, இளநீர் - தலா 1 கப்

வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

ஸ்டஃப் செய்ய

இளநீர் வழுக்கை - 1கப்

காய்ந்த திராட்சை,

முந்திரிப் பருப்பு - தலா 10

டயமண்ட் கல்கண்டு - 1 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தனித்தனியாக ஊறவைத்து, இட்லி மாவு பதத்தில் உப்பு சேர்த்து அரைக்கவும். முதல் நாள் இரவு அரைத்து வைத்து மறுநாள் மாவு பொங்கி வர வேண்டும். அப்போதுதான் தோசை மிருதுவாக இருக்கும்.

மறுநாள் காலை இட்லி மாவில் இளநீர் விட்டுக் கலக்கி, சிறு தோசையாக வார்க்கவும். இளநீர் வழுக்கையைக் கத்தியால் சிறு துண்டுகளாக்கித் திராட்சை மற்றும் சிறு துண்டுகளாக நறுக்கிய முந்திரிப் பருப்பு, டயமண்ட் கல்கண்டு சேர்த்து கலந்து, அதை வைத்து இருபுறமும் சுருட்டி மூடவும். சூடாகச் சாப்பிட்டாலும் ஆறிய பிறகு சாப்பிட்டாலும் இந்த இளநீர் தோசை ரோல் பிரமாதமாக இருக்கும்.

SCROLL FOR NEXT