பசலை ஆலு சாகு
என்னென்ன தேவை?
பசலைக் கீரை – ஒரு கட்டு
உருளைக் கிழங்கு – 2
வெங்காயம் – 1
தக்காளி – 1
பாசிப் பருப்பு – அரை கப்
மிளகாய் வற்றல் – 6
தேங்காய்த் துருவல் – அரை கப்
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 2 பல்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
சீரகம், கடுகு – தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
பாசிப் பருப்பையும் தோல் நீக்கிய உருளைக் கிழங்கையும் நன்றாக வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள். தேங்காய்த் துருவல், மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி ஆகியவற்றைப் போட்டு வதக்கிக்கொள்ளுங்கள்.
அவற்றுடன் நறுக்கிய பசலைக் கீரையைச் சேர்த்து நன்றாக வதக்கி, மசித்து வைத்துள்ள பாசிப் பருப்பையும் உருளைக் கிழங்கையும் சேர்த்துக் கிளறுங்கள். அரைத்துவைத்துள்ள தேங்காய்க் கலவை, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, கெட்டியாக வரும்வரை கொதிக்கவிடுங்கள். கீரை நன்றாகக் கொதித்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து இறக்கிவிடுங்கள்.