சமையலறை

கம்பங் கூழ்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

கம்புக் குருணை அல்லது கம்பு - அரை கப்

மோர் - ஒன்றரை கப்

சின்னவெங்காயம் - 10

வாழைத்தண்டுச் சாறு - கால் கப்

மல்லித் தழை - சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கம்புக் குருணை கிடைக்கவில்லை என்றால் முழு கம்புப் பயிறை வாங்கி, அரை மணிநேரம் ஊறவையுங்கள். தண்ணீரை வடித்து மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டினால் போதும்.

கம்புக் குருணையைச் சிறிது நேரம் ஊறவைத்து அரை கப் குருணையுடன் ஒன்றரை கப் தண்ணீ ர் சேர்த்துக் குக்கரில் வேகவையுங்கள். சூடு ஆறியதும் மசித்துக்கொள்ளுங்கள். அதனுடன் மோர், சின்ன வெங்காயம், உப்பு, வாழைத்தண்டுச் சாறு, மல்லித் தழை சேர்த்துப் பரிமாறுங்கள். புளிக்காத இந்தக் கூழ் அனைவருக்கும் பிடிக்கும்.

SCROLL FOR NEXT