சமையலறை

ஜெல்லி பர்பி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

இளநீர் - ஒரு கப்

அகர் அகர் (ஒரு வகை கடல்பாசி) - ஒரு டீஸ்பூன்

சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்

தேங்காய்ப் பால் - ஒரு கப்

சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் இளநீரை ஊற்றி அதில் அதில் அகர் அகர், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பில்வையுங்கள். ஐந்து முதல் எட்டு நிமிடம்வரை கிளறுங்கள். சிறிது கெட்டியானதும் ஒரு அலுமினிய டிரேயில் கொட்டிப் பரப்பிவிடுங்கள். இதேபோல் தேங்காய்ப் பாலையும் செய்து முதலில் கொட்டிய இளநீரின் மேல் (கொஞ்சம் கெட்டியாக ஆனதும்) கொட்டிப் பரப்புங்கள். அரை மணி நேரத்தில் நன்றாகப் பிடித்துக்கொள்ளும். பிறகு துண்டுகள் போட்டுப் பரிமாறுங்கள்.

SCROLL FOR NEXT