சமையலறை

ராகி கருப்பட்டி அல்வா

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

ராகி தானியம் - ஒரு கப்

கருப்பட்டி - ஒன்றேகால் கப்

ஏலக்காய் - 10

நெய் - 50 கிராம்

சுக்கு - சிறிதளவு

முந்திரி, பாதம், பிஸ்தா - சிறிதளவு.

எப்படிச் செய்வது?

முழு ராகியைக் கழுவி, எட்டு மணி நேரம் ஊறவையுங்கள். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அதை வடிகட்டிப் பாலெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரில் கருப்பட்டியைக் கரைத்துக் கொதிக்கவிடுங்கள். பாகு பதத்துக்கு வந்ததும் வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

அடுப்பில் வாணலியை மிதமான சூட்டில் வைத்து, ராகிப் பாலை ஊற்றி, கைவிடாமல் கிளறுங்கள். அல்வா பதத்துக்கு வந்ததும் கருப்பட்டி பாகு ஊற்றி, இடைவிடாமல் கிளறுங்கள். நெய்யை ஊற்றிக் கிளறி, ஏலக்காய் பொடியைச் சேர்த்து இறக்கிவையுங்கள். நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி, பிஸ்தாவைச் சேர்த்துப் பரிமாறுங்கள்.

SCROLL FOR NEXT