சமையலறை

புதினா சோள புலவ்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

சீரக சம்பா அரிசியில் வடித்த சாதம் ஒரு கப்

புதினா ஒரு கப்

பச்சை மிளகாய் 2

இஞ்சி பூண்டு விழுது அரை டேபிள் ஸ்பூன்

வேகவைத்த இனிப்பு சோளம் ஒரு கப்

எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன்

நெய், உப்பு தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றிக் காய்ந்ததும் கீறிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சோள முத்துக்கள், உப்பு சேர்த்து வதக்குங்கள். பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்துவிட்டு புதினா இலை, எலுமிச்சை சாறு சேர்த்து, வடித்த சாதத்தைச் சேர்த்துக் கிளறுங்கள். விரும்பினால் பொரித்த பனீர் துண்டுகள், வறுத்த முந்திரி சேர்க்கலாம்.

SCROLL FOR NEXT