சமையலறை

தேர்வு நேர சத்துணவு: பயறு மசாலா கறி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

முளைகட்டிய பச்சைப்பயறு - 1 கப்

வெங்காயம், தக்காளி – தலா 2

இஞ்சி, பூண்டு விழுது,

மிளகாய் தூள் - தலா ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாத் தூள் - 6 டீஸ்பூன்

சீரகம், கடுகு – தலா ஒரு டீஸ்பூன்

சோம்பு - அரை டீஸ்பூன்

பட்டை – சிறிய துண்டு

தனியா - அரை டீஸ்பூன்

எண்ணெய் - 3 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பச்சைப் பயறை முதல் நாள் காலையிலேயே தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக்கொள்ளுங்கள். நன்கு ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் அடுத்த நாள் முளைகட்டிவிடும்.

குக்கரில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கடுகு, சோம்பு, பட்டை சேர்த்துத் தாளியுங்கள். பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்குங்கள். அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்குங்கள். நன்றாக வதங்கியதும் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் இரண்டு விசில் விட்டு இறக்கிவையுங்கள்.

குக்கர் சூடு தணிந்ததும் சிறிதளவு நெய், எலுமிச்சைச் சாறு ஊற்றினால் சுவை கூடும். இதை சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றுக்குத் தொட்டுக் கொள்ளலாம்.


அம்பிகா

SCROLL FOR NEXT