சமையலறை

பயணத்துக்கு ‘சுவை’ கூட்ட: இனிப்பு வரட்டி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

நேந்திரம் வாழைக்காய் - 2

வெல்லம் – கால் கிலோ

சுக்குத் தூள், ஏலக்காய் - சிறிதளவு

தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

நேந்திரங்காய் தோலைச் சீவி நான்கு பாகங்களாகப் பிளந்துகொள்ளுங்கள். அவற்றை விரும்பிய வடிவங்களில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்துக்கொள்ளுங்கள். சுக்கு, ஏலக்காய் சேர்த்து வெல்லத்தைப் பாகு காய்ச்சி வைத்துக்கொள்ளுங்கள். பொரித்த நேந்திரங்காயை அகலமான பாத்திரத்தில் போட்டு, அதில் வெல்லப் பாகைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஒன்றுடன் ஒன்று ஒட்டாதவாறு கிளறுங்கள். ஆறியதும் காற்றுப் புகாத பாத்திரத்தில் போட்டுவையுங்கள்.


ராஜபுஷ்பா

SCROLL FOR NEXT