சமையலறை

பொடித் தூவல்

ப்ரதிமா

என்னென்ன தேவை?

சீனிக் கிழங்கு – கால் கிலோ

வறுத்து பொடிக்க

வேர்க்கடலை – 2 டீஸ்பூன்

முந்திரி- 10

பாதாம் – 5

வெள்ளை எள் – 1 டீஸ்பூன்

கசகசா – 1 டீஸ்பூன்

உலர் கொப்பரைத் தேங்காய் – கால் கப்

பொடித்த சர்க்கரை – 3 டீஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி – சிறிதளவு

நெய் – 2 டீஸ்பூன்

வறுத்த திராட்சை – 10

தேங்காய்த் துருவல் -2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

சீனிக் கிழங்கை அடுப்பில்  சுட்டெடுத்துத்  தோலுரித்து உதிர்த்துக் கொள்ளுங்கள். வறுக்க கொடுத்தப் பொருட்களைப் பொன்னிறமாக வறுத்துப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு அகலமான பாத்திரத்தில் உதிர்த்து வைத்துள்ள சீனிக்கிழங்கு, பொடித்த பொடி, ஏலக்காய்ப் பொடி, வறுத்த திராட்சை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறிப் பரிமாறுங்கள்.

SCROLL FOR NEXT