என்னென்ன தேவை?
தேங்காய்த் துருவல் (லேசாக வறுத்தது) - 1 கப்
வெல்லம் – 1 கப்
பல்குத்தும் குச்சிகள் - 15
ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வெல்லம் மூழ்கும் அளவுக்குத் தண்ணீரை ஊற்றி நன்றாகக் கொதிக்கவிடுங்கள். பாகு கால்பாகம் வரும்வரை காய்ச்சிக்கொள்ளுங்கள். அதனுடன் தேங்காய்த் துருவலைக் கொட்டி, ஏலக்காய்த் தூளைச் சேர்த்துக் கிளறுங்கள். கலவை நன்றாகத் திரண்டு சுண்டிவரும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள். ஒரு தட்டில் நெய்யைத் தடவி இந்தக் கலவையைக் கொட்டுங்கள். வெல்லப்பாகு இளம் சூட்டில் இருக்கும்போதே சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து குச்சிகளில் சொருகி ஆறவைத்துச் சாப்பிடுங்கள்.