சமையலறை

தேர்வு நேர சத்துணவு! - எக் ரோல்

ப்ரதிமா

முட்டை - 3

வெள்ளரிக்காய், கேரட், வெங்காயம் - தலா 1 (துருவியது)

கோஸ் - சிறிதளவு (துருவியது)

வெங்காயத்தாள் - சிறிதளவு (நறுக்கியது)

வறுத்த தேங்காய்த் துருவல் - சிறிதளவு

சீஸ் - 25 கிராம்

மிளகுத் தூள், உப்பு, மஞ்சள் தூள் - சிறிதளவு

முட்டையை உடைத்து அதனுடன் குறைந்த அளவு உப்பு, மஞ்சள் தூள், வெங்காயத் தாளைச் சேர்த்துக் கலக்குங்கள். இதைத் தோசைக் கல்லில் மெலிதாக ஊற்றி வெந்ததும் மேலே நீளவாக்கில் வரிசையாக கேரட், வெள்ளரிக்காய், கோஸ், வெங்காயம், மல்லித்தழை ஆகியவற்றை வைத்து அவற்றின் மேல் மிளகுத் தூளைத் தூவுங்கள். பிறகு சீஸைத் துருவிச் சேர்த்து அப்படியே சுருட்டி, சிறு துண்டுகளாக நறுக்கி, வறுத்த தேங்காய்த் துருவல் தூவிப் பரிமாறுங்கள்.

படங்கள்: ஜான் விக்டர்

SCROLL FOR NEXT