தேர்வு நேர சத்துணவு! - வெண்டை சீஸ் பொரியல்

என்னென்ன தேவை?

வெண்டைக்காய் - கால் கிலோ

சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)

இஞ்சித் துண்டு - சிறிதளவு

பூண்டுப் பல் - 3 (நசுக்கியது)

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப

சீஸ் - 25 கிராம்

தாளிக்க

நல்லெண்ணெய் - தேவையான அளவு

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

வெண்டைக்காயைக் கழுவி நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி பின் வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் வெண்டைக்காயைச் சேர்த்து குறைந்த தீயில் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்துக் கிளறுங்கள். வெண்டைக்காய் நன்றாக வெந்ததும் சீஸ் துருவிச் சேர்த்து இறக்குங்கள். சீஸ் வெண்டைக்காயின் மேலே உருகி சூடாகச் சாப்பிட ருசியாக இருக்கும். சீஸில் உப்பு இருப்பதால் வெண்டைக்காயில் உப்பைக் குறைவாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE