சமையலறை

மருத்துவ உணவு: சுக்கு – பூண்டு லேகியம்

ப்ரதிமா

என்னென்ன தேவை?

மாஞ்சுக்கு – 100 கிராம்

பூண்டு – 100 கிராம்

கருப்பட்டி – 200 கிராம்

தேன் – 2 டேபிள் ஸ்பூன்

ஏலப்பொடி – 1 டீஸ்பூன்

நெய் அல்லது நல்லெண்ணெய் – 100 கிராம்

எப்படிச் செய்வது?

மாஞ்சுக்கை அளவான தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் நைஸாக அரையுங்கள். பூண்டை நசுக்கிக்கொள்ளுங்கள். கருப்பட்டியில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் காய்ச்சி வடிகட்டுங்கள். அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு, பூண்டைக் கொட்டி வதக்குங்கள். மாஞ்சுக்கைச் சேர்த்து வதக்கியதும் மிக்ஸி கழுவிய தண்ணீரை ஊற்றி, பூண்டு வேகும்வரை கிளறுங்கள்.

பிறகு கருப்பட்டி சேர்த்துக் கிளறி, பாத்திரத்தில் ஒட்டும்போது சிறிதளவு நெய்யைச் சேருங்கள். ஏலப் பொடியைச் சேர்த்துக் கிளறுங்கள். நெய் பிரிந்துவந்ததும் தேனைச் சேர்த்துக் கிளறி இறக்கிவையுங்கள். ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் போட்டுவையுங்கள். சிறுவர் முதல் பெரியவர் வரை இதிலிருந்து நெல்லிக்காய் அளவுக்குச் சாப்பிடலாம். செரிமானத்துக்கு நல்லது.

SCROLL FOR NEXT