என்னென்ன தேவை?
ஜவ்வரிசி, உருளைக் கிழங்கு – தலா 200 கிராம்
வறுகடலை - 200 கிராம்
தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
கடலை எண்ணெய், உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு
எப்படிச் செய்வது?
உருளைக் கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள். ஜவ்வரிசியை நன்றாகக் கழுவி ஒரு கப் தண்ணீரில் ஊறவையுங்கள். ஊறும்போது கிளறிவிடுங்கள். வறுத்த வேர்க்கடலையைத் தோல் நீக்கி, மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துக்கொள்ளுங்கள். ஜவ்வரிசி, மசித்த உருளைக் கிழங்கு, வேர்க்கடலை, மிளகாய்ப் பொடி, தேங்காய்த் துருவல், அரிசி மாவு, உப்பு இவற்றுடன் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் கலந்து நன்றாகப் பிசையுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் வடையை மெலிதாகத் தட்டிப் பொரித்தெடுங்கள். இந்த வடையை அரிசி மாவு சேர்க்காமலும் செய்யலாம்.