என்னென்ன தேவை?
சேனைக் கிழங்கு – கால் கிலோ
பாசிப் பருப்பு – 1 கப்
சர்க்கரை – இரண்டரை கப்
ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 8
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
பால் – 1 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
சேனைக் கிழங்கைத் தோல்சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள். அதேபோல் பாசிப் பருப்பை வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள். அடி கனமான வாணலியில் சர்க்கரையுடன் சிறிது தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடுங்கள். அதனுடன் ஒரு டீஸ்பூன் பால் சேர்த்துக் கொதி வந்ததும் மசித்துவைத்துள்ள சேனை, பாசிப்பருப்பைச் சேர்த்து சுருளக் கிளறிக் கொள்ளுங்கள். பின்னர் நெய் சேர்த்துச் சுருள கிளறிக்கொண்டே இருங்கள். பிறகு கெட்டியான பதம் வந்ததும் இறக்கிவைத்து நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய்ப் பொடி இரண்டையும் சேர்த்துக் கிளறிப் பரிமாறுங்கள்.