சமையலறை

தால்சா

பி.டி.ரவிச்சந்திரன்

என்னென்ன தேவை?

துவரம் பருப்பு - 300 கிராம்

கடலைப் பருப்பு - 50 கிராம்

மல்லித் தூள் - 3 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் -  ஒன்றரை டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்

கத்தரிக்காய் - 250 கிராம்

ஆட்டுக்கறி எலும்பு - 1 கிலோ

இஞ்சி – பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

புளி - சிறிய எலுமிச்சை அளவு

எப்படிச் செய்வது?

துவரம் பருப்பை வேகவைக்க வேண்டும். இதில் சிறிதளவு கடலைப் பருப்பைச் சேர்க்க வேண்டும். பருப்பு வெந்துகொண்டிருக்கும்போது சிறிதளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு ஆட்டுக்கறி எலும்பையும் நறுக்கிய கத்தரிக்காயையும் அதில் சேர்க்க வேண்டும்.  பருப்பும் கத்தரிக்காயும் நன்றாக வெந்து கரைந்துவிடும். அதன் பிறகு மிளகாய்த் தூள், மல்லித் தூள், சிறிது புளிக் கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிட வேண்டும். பிரியாணியுடன் சேர்த்துச் சாப்பிட தால்சா தயார்.

SCROLL FOR NEXT