சமையலறை

தெருவெல்லாம் மணக்கும் தீபாவளி விருந்து - தேங்காய்ப் பால் முறுக்கு

ப்ரதிமா

என்னென்ன தேவை?

பச்சரிசி - 2 கப்

உளுந்து – அரை கப்

தேங்காய் – அரை மூடி

(பால் எடுத்துக்கொள்ளுங்கள்)

வெண்ணெய் - 2 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு - சிறிதளவு

எப்படிச் செய்வது?

உளுந்தை நிறம் மாறாமல் வாசனை வரும்வரை வறுத்து, அரிசியுடன் சேர்த்து முறுக்கு மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளுங்கள். ஒரு கப் மாவெடுத்து அதில் தேங்காய்ப் பால், வெண்ணெய், உப்பு சேர்த்து மிருதுவாகப் பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்த மாவை முறுக்கு அச்சில் இட்டு எண்ணெய்யில் பிழிந்து, நன்றாக வெந்ததும் எடுங்கள். எள், சீரகம் சேர்த்தும் செய்யலாம்.

SCROLL FOR NEXT