சமையலறை

தலைவாழை: திருக்கார்த்திகை விருந்து! -

ப்ரதிமா

என்னென்ன தேவை

கோதுமை ரவை -1 கப்

வெல்லம் - 1/2 கப்

தேங்காய் - 1/2 மூடி( துருவிக் கொள்ளவும் )

நெய் - 2 டீஸ்பூன்

முந்திரி, பாதாம், திராட்சை - தேவைக்கேற்ப

ஏலக்காய் - ( பொடித்துக் கொள்ளவும் )

எப்படிச் செய்வது

முதலில் கோதுமை ரவையை வாணலியில் லேசாக வாசனை வரும் வரை வறுத்து பின் குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து ஆறியதும் வடிகட்டிக் கொள்ளவும். துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு முதல் மற்றும் இரண்டாம் பாலாக எடுத்துக் கொள்ளவும். வேகவைத்த கோதுமையுடன் வெல்லம் மற்றும் இரண்டாம் பால் சேர்த்துக் கொதிக்க விடவும். வெல்ல வாசனை மாறியவுடன் முதலாம் பால் சேர்த்து , ஏலக்காய் பொடித்தூவி அடுப்பை அணைக்கவும். நெய்யில் முந்திரி, திராட்சை, பாதாம் வறுத்து பாயசத்துடன் சேர்க்கவும் .

SCROLL FOR NEXT