இயக்குநர் மணிகண்டன் இயக்கும் புதிய வெப் சீரிஸில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இந்த வெப் சீரிஸ் வெளியாக உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும் பாலிவுட்டில் வெளியான ‘ஃபார்ஸி’ இணையத் தொடரில் ஷாஹித் கபூருடன் இணைந்து நடித்தார். இந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் தமிழில் முதன்முறையாக நடிக்கும் வெப் சீரிஸை ‘காக்கா முட்டை’, ‘கடைசி விவசாயி’ புகழ் இயக்குநர் மணிகண்டன் இயக்குகிறார்.
இந்த இணையத் தொடரின் படப்பிடிப்பு இன்று மதுரை அருகே உசிலம்பட்டியில் பூஜையுடன் தொடங்கியது. ஆறுமுக குமார் தயாரிக்கும் இந்தத் தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார். இதில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.