வசந்த் ரவியின் ‘அஸ்வின்ஸ்’ ஜூலை 20-ல் ஓடிடியில் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

வசந்த் ரவி நடித்துள்ள ‘அஸ்வின்ஸ்’ திரைப்படம் வரும் ஜூலை 20-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தரமணி’, ‘ராக்கி’ படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகர் வசந்த் ரவி நடிப்பில் கடந்த ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘அஸ்வின்ஸ்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கியிருந்தார். படத்தில் விமலா ராமன், முரளிதரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா தயாரித்திருந்தது. விஜய் சித்தார்த்தா இசையமைத்திருந்தார். சைக்கலாஜிக்கல் ஹாரர் ஜானரில் உருவான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தமிழ், தெலுங்கில் வெளியான படம் திரைக்கு வந்து ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில், படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ‘அஸ்வின்ஸ்’ வரும் ஜூலை 20-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்