ஓடிடி தகவல்

‘சிட்டாடெல்’ செர்பியா ஷெட்யூல் முடிந்தது

செய்திப்பிரிவு

மும்பை: நடிகை சமந்தா, ‘சிட்டாடெல்’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். அமேசான் பிரைம் வீடியோ தளத்துக்காக உருவாகும் இதில், இந்தி நடிகர் வருண் தவண் நாயகனாக நடிக்கிறார். ராஜ் மற்றும் டீகே இயக்குகின்றனர். இதில் பிரியங்கா சோப்ராவின் பிளாஷ்பேக் காட்சியில், சமந்தாவும் வருண் தவணும் இடம்பெறுகின்றனர். இந்தத் தொடரில் நடிக்க சமந்தாவுக்கு ரூ.10 கோடி ஊதியம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு செர்பியா நாட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் அங்கு படப்பிடிப்பு முடிந்து விட்டதாக வருண் தவண் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT