திருச்சி: உசுப்பேற்றும் அழகிரி ஆதரவாளர்கள்... அமைதி காக்கும் ஸ்டாலின் அணியினர்

By அ.சாதிக் பாட்சா

திருச்சியில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் மிக அதிகம் என்றபோதிலும் ஸ்டாலின் பற்றி அழகிரி சொன்ன வார்த்தைகளைக் கண்டித்து பல ஊர்களில் அழகிரியின் கொடும்பாவி எரிக்கப்பட்டு வரும் நிலையில் திருச்சியில் உள்ள ஸ்டாலின் ஆதரவாளர்கள் மிகவும் அமைதி காத்தது கண்டு ஆச்சரியப்படுகின்றனர் அண்டை மாவட்ட தி.மு.கவினர்.

திருச்சி எப்போதுமே தி.மு.கவில் ஸ்டாலின் கோட்டையாக இருந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுக்க ஸ்டாலின் எங்கே சென்றாலும் அவருடன் செல்லும் அன்பில் பொய்யாமொழி, பரணி குமார் ஆகியோர் திருச்சியைச் சேர்ந்தவர்கள். பொய்யாமொழி இறந்த பிறகு மாவட்டச் செயலாளரான நேரு ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக மாறினார்.

அதே சமயம் அழகிரிக்கும் திருச்சியில் ஓரளவு ஆதரவாளர்கள் இருக்கவே செய்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன், முன்னாள் எம்.பி திருச்சி சிவா, வழக்கறிஞர் எட்வின் ஜெயக்குமார் என சில பிரபலங்கள் அழகிரி ஆதரவாளர்களாக இருந்தனர். காலப்போக்கில் அழகிரி தொண்டர்களைச் சந்திப்பதை தவிர்த்து வந்ததாலும் கட்சியில் பிடி தளர்ந்து அவரது செல்வாக்கு குறைய ஆரம்பித்ததாலும் இவர்கள் அணி மாற ஆரம்பித்தனர்.

நேரு, ஸ்டாலின் ஆதரவாளர் என்ற போதும் அவரது தம்பி ராமஜெயம் அழகிரி ஆதரவாளர் போல் தன்னைக் காட்டிக்கொண்டார். அதனால்தான் அழகிரி அவரது அகால மரணச் செய்தி கேள்விப்பட்டு குடும்பத்துடன் திருச்சிக்கு வந்து துக்க நிகழ்வில் கலந்துகொண்டதுடன் சுடுகாடுவரை சென்று இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.

இப்போதும் சிலர் அழகிரி ஆதரவாளர்களாக அவதாரமெடுத்துள்ளனர். ஸ்டாலின் ஆதரவாளரான நேருவால் புறக்கணிக்கப்பட்டவர்கள் அழகிரி பக்கம் சாய ஆரம்பித்திருக்கின்றனர். முன்னாள் நகர துணைச் செயலாளரான பிலால், ஸ்ரீரங்கம் கோயில் முன்னாள் அறங்காவலரான வெங்கடாச்சலம், மார்க்கெட் வேலுமணி என சுமார் 200 பேர் செவ்வாய்க்கிழமை மத்திய பேருந்து நிலையமருகேயுள்ள ஒரு ஹோட்டலில் கூடி ஆலோசனை செய்தனர்.

ஜனவரி 30-ம் தேதி மதுரையில் நடைபெறும் அழகிரி பிறந்த நாள் கொண்டாட்டங்களில் திரளாகச் சென்று கலந்துகொள்வதென்றும் பிப்ரவரி மாதத்தில் திருச்சியில் அழகிரியை அழைத்து வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடர்வது என்றும் முடிவு செய்ததாகச் சொல்கின்றனர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்.

இந்தக் கொண்டாட்டம் திருச்சியில் தி.மு.க நடத்தவிருக்கும் மாநாட்டுக்குப் பிறகு நடக்குமா அல்லது முன்பே நடக்குமா என்கிற கேள்விக்குப் பதில் சொல்லாமல் சிரிக்கின்றனர் அழகிரி ஆதரவாளர்கள். புதன்கிழமை திருச்சியில் திரும்பிய பக்கமெல்லாம் அழகிரியை வாழ்த்தியும், அமைதியாக இருக்கும் அழகிரி ஆதரவாளர்களை உசுப்பேற்றியும், ஸ்டாலின் ஆதரவாளர்களைச் சீண்டும் விதமாகவும் விதவிதமான சுவரொட்டிகள் முளைத்தன. மாநாடு நடக்கப்போகும் சமயத்தில் கட்சிக்குள் இப்படி களேபரங்கள் நிகழ்வதை பெரும்பாலான தொண்டர்கள் ரசிக்கவில்லை.

ஸ்டாலின் ஆதரவாளரான நேரு, “உருவபொம்மை எரிப்பது, போட்டி சுவரொட்டி அடிப்பது மாதிரியான எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்க வேண்டாம். நமக்கு கட்சி இட்ட பணியான மாநாட்டைச் சிறப்பாக நடத்துவது பற்றி மட்டும் இப்போது யோசிப்போம். மற்றவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” எனச் சொல்லி திருச்சியில் உள்ள கட்சியினரை அமைதிப்படுத்தி வைத்திருக்கி றாராம். “அதனால்தான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம் இல்லைன்னா நடக்கிறதே வேற” என்கிறார்கள் திருச்சியில் உள்ள ஸ்டாலின் ஆதரவாளர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

கருத்துப் பேழை

26 mins ago

விளையாட்டு

30 mins ago

இந்தியா

34 mins ago

உலகம்

41 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்