கிருஷ்ணனின் பணியும் வாழ்வும்

By செய்திப்பிரிவு

சர்.சி.வி.ராமனின் மாணவராக இருந்த தமிழரான கரியமாணிக்கம் சீனிவாச கிருஷ்ணன் வாழ்க்கை குறித்து பெங்களூரு அறிவியல் கழகத்தின் வானியல் பேராசிரியர்கள் டி.சி.வி. மாலிக்கும், சாட்டர்ஜியும் இணைந்து ஒரு நூல் (கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணன்: ஹிஸ் லைஃப் அண்டு வொர்க்) எழுதி இருக்கின்றனர்.

516 பக்கங்களோடு ஆங்கிலத்தில் வெளியான அந்நூலைத் தவிர, பிற நூல்களிலோ, இதழ்களிலோ அவரின் வாழ்வு பேசப்படவே இல்லை என்பதுதான் வேதனைக்குரிய அம்சம்.

நிறப்பிரிகைக் கோட்பாட்டின் வெற்றிக்குப் பெரும்பங்காற்றிய அவர் கண்டுகொள்ளப்படாமல் போனதை அந்நூல் வேதனையுடன் பதிவுசெய்திருக்கிறது.

என்றாலும், தன் அறிவியல் முயற்சிகளை மனம் தளராமல் கிருஷ்ணன் மேற்கொண்டதையும் அந்நூல் மறக்காமல் பதிவுசெய்திருக்கிறது.

- முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE