இப்படிக்கு இவர்கள்

கணினி ஆசிரியர்கள் தேவை

செய்திப்பிரிவு

நம் சமூகத்தில் பெரும்பாலானோர் கணினி பயன்படுத்தாமல் வாழ முடியாத சூழ்நிலை இன்று உள்ளது.

பல கோடி ரூபாய் செலவில் இலவச மடிக்கணினி கொடுப்பதாகச் சொல்லிக்கொள்ளும் அரசு அதற்கான ஆசிரியர் நியமனம் பற்றி அறிவிக்காமல் இருந்தால் பள்ளி மாணவர்கள் எப்படிப் பயன் பெறுவது?

வருகிற 2015-16 கல்வி ஆண்டிலாவது 6 முதல் 12 வகுப்பு வரை முறையான கணினி பாடப் பிரிவு உருவாக்கப்பட்டு அதற்கான ஆசிரியர் நியமனம் நடைபெற வேண்டும். இல்லையெனில் ஏழை எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில் கணினி என்பது காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கும். மேலும், கணினிக் கல்வி படித்த பல இளைஞர்கள் வேலை பெற முடியாமல் போய்விடும்.

- சி. விஜயானந்த்,கோயமுத்தூர்.

SCROLL FOR NEXT