நிலுவை மசோதாக்கள்: நிரந்தரத் தீர்வு வேண்டும்!

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆளுநருக்கு எதிராகத் திமுக அரசு தொடர்ந்துள்ள வழக்கில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இதுபோன்ற விவகாரங்களை உச்ச நீதிமன்றம் தீர்வை நோக்கி நகர்த்தும் என்கிற நம்பிக்கையை இது ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் காலதாமதம் செய்கிறார் என்றும் மசோதாக்கள், அரசாணைகள், கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் காலவரம்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

‘மசோதாக்களுக்கு அனுமதி வழங்க ஆளுநர்கள் காலதாமதம் செய்வது கவலைக்குரியது’ என்று உச்ச நீதிமன்றம் நவம்பர் 10 அன்று கருத்து தெரிவித்திருந்தது. இதையடுத்து, நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 10 மசோதாக்கள் ‘நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன’ (Withheld) என்று குறிப்பிட்டு, நவம்பர் 13 அன்று அவற்றை அரசுக்கே ஆளுநர் திருப்பி அனுப்பினார். தமிழ்நாடு அரசு உடனடியாகச் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, அந்த மசோதாக்களை நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கே திருப்பி அனுப்பியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 mins ago

விளையாட்டு

1 min ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

32 mins ago

உலகம்

43 mins ago

விளையாட்டு

55 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

1 hour ago

மேலும்