மோடியும் லிபரல்களின் தோல்வியும்

By ஷிவ் விஸ்வநாதன்

என்னுடைய நண்பர் ஒருமுறை குறிப்பிட்டார்: “சரளமாக ஆங்கிலம் பேசும் உங்களைப் போன்ற மதச்சார்பற்ற படித்தவர்கள் மற்றவர்களை அச்சுறுத்துபவர்கள். பெரும்பாலான மக்களுக்கு இயல்பாக ஏற்படும் (மத) உணர்ச்சிகளுக்காக அவர்களை வெட்கப்படுமாறு செய்தீர்கள்.” இந்த விமர்சனம் கடுமையாகத் தாக்குவதுபோல் இருந்தாலும், அது நியாயம்தான் என்று புரிந்தது. இது மட்டுமல்ல, இதைவிடக் கடுமையான குற்றங்களை நானும் என் போன்ற சுதந்திரப் போக்காளர்களும் (லிபரல்கள்) இழைத்திருக்கிறோம் என்று அப்போது உணர்ந்தேன்.

அதே சமயம் என்னுடைய இடதுசாரி நண்பர்கள் “கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக்கான தேசிய கவுன்சில்” (என்.சி.ஈ.ஆர்.டி.) வெளியிட்ட புத்தகங்களையெல்லாம் கணினியில் அவசர அவசரமாகப் பதிவிறக்கம் செய்துகொண்டிருந்தார்கள். மோடி ஆட்சிக்கு வந்துவிட்டதால் இந்தப் புத்தகங்களையெல்லாம் இனி திரும்பப்பெற்றுவிடுவார்கள் என்று அவர்கள் அஞ்சு கின்றனர். தங்களுடைய சிந்தனைதான் சரி, தங்களுடைய அனுபவம்தான் நியாயமானது என்ற போக்கிலேயே இதுவரை சிந்தித்தும் செயல்பட்டும் வந்த அவர்களுக்கு திடீரென்று அச்சம் ஏற்பட்டுவிட்டது. உண்மையான வரலாறு என்ன என் பதை அரசு நடுநிலையாக எழுத வேண்டும் என்று இடதுசாரி களும் வலதுசாரிகளும் அரசைக் கோரியது நினைவுக்கு வந்தது. இப்போது வலதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டதால் வரலாறும் அதிகாரிகளால் வேறு கோணத்தில் புதிதாக எழுதப்படும் என்று தோன்றியது.

மதச்சார்பின்மை என்ற ஆயுதம்

இந்தத் தேர்தலில் சுதந்திரப் போக்காளர்கள் (லிபரல்கள்) ஏன் தோற்றுப்போனார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்காக இந்த அச்சங்களை சுட்டிக்காட்டுகிறேன். நடுத்தரவர்க்க மக்களுடைய மனங்களில் இருந்த அச்சத்தை, அறிவுஜீவிகளைவிட நரேந்திர மோடி நன்கு கவனித்திருக்கிறார். இடதுசாரி அறிவுஜீவிகளும் அவர்களையொத்த சுதந்திரப் போக்காளர்களும் ஒரு கூட்டமைப்புபோலச் செயல்பட்டார்கள். மதச்சார்பின்மைதான் மிக மேன்மையானது என்பதுபோல நடந்துகொண்டார்கள். மதம் என்பது வாழ்க்கை முறை என்று கருதாமல் அது மூட நம்பிக்கை என்பதைப் போல நடத்தினார்கள். மூட நம்பிக் கைகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் எதிராக சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் அல்லது புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்று முழங்கினார்கள். மதச் சார்பின்மை என்பதை இடைவிடாமல் முழங்கி, ஒரு வெற்றி டத்தை ஏற்படுத்தினார்கள்.

மதச்சார்பின்மை என்பது அரசியல்ரீதியாகச் சரிசெய் யும் நடவடிக்கை. ஆனால், அதைக் குறிப்பிட்ட மதத் தைச் சேர்ந்தவர்கள் கோபம்கொள்ளும் வகையில் வலியுறுத் தினார்கள். பெரும்பான்மைச் சமூகத்தினர் நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பதைப் போல சிறுபான்மைச் சமூக மக்க ளுக்கு அரசியல்ரீதியாகச் சலுகைகளை அளிக்க ஆட்சியாளர் கள் முன்வந்தனர். இனரீதியான குறுகிய நோக்கு, மதச்சார் பின்மை ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்ய வேண்டும் என்றபோது இனம்சார்ந்து செயல்பட்டார்கள். மதச்சார் பின்மைக்கும் மத அபிமானத்துக்கும் இடையில் விநோதமான போராட்டம் நடந்துவந்தது. மதாபிமானம் கூடாது என்று மதச்சார் பற்றவர்கள் கட்டாயப்படுத்தத் தொடங்கியபோது அது வெறுமை யானது என்றோ அர்த்தமற்றது என்றோ நினைத்தனர். எனவே, மதநம்பிக்கையும் மதச் சடங்குகளும்தான் மதச்சார்பற்ற கொள்கைக்குத் தகுந்த மாற்றாக இருக்க முடியும் என்று முடிவெடுத்தனர். மதச்சார்பின்மை என்பது ஒருவ ருக்கு மூன்று வாய்ப்புகளைத் தருகிறது. முதலாவது அரசையும் வேறுபடுத்துகிறது. அதாவது அரசானது எல்லா மதங்களிலிருந்தும் விலகியிருக்க வேண்டும் அல்லது எல்லா மதங்களையும் அணுகி நிற்க வேண்டும். அரசியல் சட்ட மானது எல்லா மதங்களிலிருந்தும் அரசு விலகியிருக்க வேண்டும் என்றே கூறுகிறது ஆனால், சமுதாயங் களோ எல்லா மதங்களுடனும் அரசு நெருங்கி யிருப்பதையே விரும்புகின்றன.

மதச்சார்பற்றவர்களின் பார்வையில் அறிவி யலும் மதமும் வெவ்வேறானவை. கிறிஸ்தவ மதம்தான் அறிவியலோடு அதிகம் மோதியது, பிற மதங்கள் மோதல் போக்கைக் கைக்கொள்ள வில்லை. இதில் இன்னொருவிதமான ஒடுக்கு முறையும் சேர்ந்துகொண்டது. அறிவியல் அறிஞர் கள்கூட மதநம்பிக்கைகளிலிருந்தும் மதப்பழக்க வழக்கங்க ளிலிருந்தும் விலகியிருக்குமாறு கூறப்பட்டனர். அறிவியல் விஞ்ஞானி, ராகுகாலம் கழிந்த பிறகு வருவதுகூட விமர் சனத்துக்கு உள்ளாயிற்று.

அடக்குமுறையாகவே மாறியது

மதநம்பிக்கைக்காகவும் சடங்குகளைச் செய்வதற்காகவும் மத்தியதர வர்க்கத்தினர் கண்டிக்கப்பட்டனர், எள்ளி நகையாடப் பட்டனர். மதச்சார்பின்மை என்ற கொள்கைதான் அனைவரையும் மேல்தளத்துக்கு இட்டுச்செல்லும் நாகரிக வழிமுறை என்று போதிக்கப்பட்டது. பெரும்பான்மை மதத்தின் மத்தியதர வர்க்கம் இப்படி அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டது. மதச்சார்பற்றவர்களுக்கு மதம் என்றாலே வேப்பங்காய்தான். அதையே கலை வடிவமாகவோ, நுண்கலையாகவோ, கவிதையாகவோ, உருவகமாகவோ ஏற்க அவர்களுக்குத் தயக்கமில்லை. மதச்சார்பற்றவர்கள் மதத்தைப் பற்றித் தவறாக புரிந்துகொண்டதால், மதநம்பிக்கை உள்ளவர்களையெல்லாம் மதவாதிகளாகப் பார்க்கத் தொடங்கினார்கள். ஒரேயொரு வீச்சில் மதநம்பிக்கையுள்ள பெரும்பான்மை மதத்தவர்கள் அனைவருமே தீயவர்களாகிவிட்டனர்.

பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த, மதநம்பிக்கையுள்ளவர் களின் மனக்குறையை மன ஏக்கத்தை மோடி நன்கு புரிந்து கொண்டார். நாம் தனித்து விடப்படுகிறோம் என்று நினைத்த அவர்களை அரவணைத்துக்கொண்டார். மதச்சார்பின்மை என்பது அவர்கள் கருதுவதைப் போல கருணையின் வடிவமோ, இயல்போ அல்ல வெறும் பொய்வேடம் என்பதை அம்பலப்படுத்தினார். மதச்சிறுபான்மையோ, மதரீதி யாக நம்பிக்கைக் கொள்வதும் சடங்குகளைப் பின்பற்றுவதும் தவறில்லை, பெரும்பான்மை மதத்தவர்கள் அதில் ஈடுபடுவதுதான் தவறு என்ற அவர்களுடைய பாரபட்சமான போக்கை அவர் வெளிச்சம்போட்டுக்காட்டினார்.

மதச்சார்பற்றவர்களால் மட்டம்தட்டப்பட்டு, ஒதுக்கப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்ட மத்தியதர வர்க்கத்தின் எண்ணிக்கை பெரியது என்பதால் அதையே தன்னுடைய முக்கிய சேனை யாக மாற்றிக்கொண்டார். மதமாற்றம் என்பது மிகவும் நுட்ப மான, உணர்ச்சிகரமான விஷயம். இந்துத்துவக் குழுக்களின் தீவிரமான செயல்பாடு அனைத்துமே தீய உள்நோக்கம் கொண்டவையாகச் சித்தரிக்கப்பட்டுக் கண்டிக்கப்பட்டன. பிற மதங்களின் அடிப்படைவாதங்களும் செயல்களும் நியாய மான எதிர்வினைகளாகவும், தீங்கு விளைவிக்காத சாத்வீக மான செயல்களாகவும் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமை களாகவும் சித்தரிக்கப்பட்டன. எதையும் விருப்புவெறுப்பு இல்லாமல் பார்க்கும் பண்பு மறைந்து மத அடிப்படை யில் திரித்துப் பார்க்கும் போக்கு அதிகரித்துவருகிறது. 'போலி மதச்சார்பின்மை' என்பது அர்த்தம் பொதிந்த, கடும் வெறுப்பை ஏற்படுத்துகிற வார்த்தையாக மாறிவிட்டது.

மதச்சார்பின்மை என்பது நவீனக் கோட்பாடு, அதே சமயம் நவீனத்துவம் என்றால் என்ன என்று புரிந்துகொள்ளும் பொறுமை அதற்கு இல்லை! நம்முடைய சமூகத்தில் மதமே ஒரே சமயத்தில் பேரண்டத்தை விளக்கும் அறிவியலாகவும் சூழலியலைச் சொல்லித்தரும் ஆசானாகவும் சடங்காகவும் உருவகமாகவும் விளங்குகிறது. இங்கே பெரும்பாலானோர் அதையே சிந்திக்கிறார்கள்; சுவாசிக்கிறார்கள்.

தேவாலயத்தில் தபால் அலுவலகங்கள்

ஐரோப்பாவின் பல பகுதிகளில் இப்போது மதம் என்றாலே வெறுக்கிறார்கள். ஹாலந்து நாட்டில் மிகவும் அழகான பல தேவாலயங்கள் மக்களுடைய வருகை குறைந்ததால் தபால் அலுவலகங்களாக மாற்றப்பட்டுவிட்டன. இந்தியாவில் அப்படிப்பட்ட நிலை இல்லை. ஒரு நாட்டின் அல்லது கண்டத்தின் வரலாற்றைப் பெயர்த்துப் பயன்படுத்தும்போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நம்முடையது வித்தியாசமான கலாச்சாரம். மதம், தொன்மம், சடங்கு ஆகியவற்றுடன் கலாச்சாரம் தொடர்புள்ளது. நம் நாட்டில் நடைபெறும் அறிவியல் மாநாடுகளே சிறிய கும்பமேளா போலத்தான் திருவிழாக் கோலமாக இருக்கும். முக்கியமான விஷயம், நம்முடைய மதம் அறிவியலுக்கு எதிராக எப்போதும் இருந்ததில்லை. எனவே, இந்த மாதிரியான சம்பவங்களை எதிர்கொள்ளும்போது பன்முகத்தன்மையோடு நம்முடைய அரசின் செயல்பாடு இருக்க வேண்டும். மதச்சார்பின்மை என்பது வெற்றிடமாக இருக்க முடியாது. சகிப்புத்தன்மை என்பது மதச்சார்பின்மையின் பலவீனமான வடிவம். தேர்தலை எதிர்கொள்ளும்போது மதச்சார்பின்மைக்குப் புதுவடிவம் தர வேண்டும். அது கேள்விகேட்டு பதில்தருவதாக இருக்க வேண்டும். மோடியால் திரட்டப்பட்ட ஆதரவுக்கு அப்போதுதான் நாம் மாற்றை வழங்க முடியும்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: சாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்