சிறப்புக் கட்டுரைகள்

மூளை​யின்​ வேலை ​முறை ஏற்​படுத்​தி​ய ​தாமதம்​ | ஏஐ எதிர்காலம் இன்று 17

ஆழி செந்தில்நாதன்

‘‘ஒவ்​வொரு நியூ​ரானும்​ ஆ​யிரக்​கணக்​கான மற்ற நியூ​ரான்​களு​டன்​ இணை​கிறது’’ என்றது செய்​மெய்​. இணைப்​பு​களின்​ அமைப்பே அனைத்​தை​யும்​ தீர்​மானிக்​கிறது. அவை​தான்​ நரம்​பியல்​ வலைப்​பின்​னல்கள்​ (Neural Networks) - குறிப்​பிட்​ட பணி​களைச்​ செய்​வதற்​காக ஒன்​றிணைந்​து செயல்​படும்​ நியூரான்​களின்​ தொகுப்​பு​கள்​தான்​ நரம்​பியல்​ வலைப்​பின்னல்​கள்​.

மூளை​யின் பல்​வேறு பகு​தி​களில் உள்ள நரம்​பியல் வலைப்​பின்​னல்​கள் இந்த வண்ணக் காட்​சி​யில் ஒளிர்ந்​தன, உருவாகி மறை​யும் விண்​மீன் கூட்​டங்​களைப் போல் அவை காணப்​பட்​டன. சில வலைப்​பின்​னல்​கள் ஒலியணுக் கூறுகளை - அடிப்​படைப் பேச்சு ஒலிகளை - அடை​யாளம் கண்​டன. மற்​றவை சொற்​களைப் புரிந்​து​கொண்டு அவற்றின் அர்த்​தங்​களை​யும் கண்டறிகின்றன.

செய்​மெய் தொடர்ந்​தது: “இந்த வலைப்​பின்​னல்​கள் அடுக்​கடுக்​காக அமைந்​திருக்​கின்​றன. முதல் அடுக்கு வெறும் ஒலிகளை மட்​டுமே அடை​யாளம் காணும், அடுத்த அடுக்கு அந்த ஒலிகளைச் சொற்​களாக உணர்​கிறது, மற்​றொரு அடுக்கு இலக்​கணத்​தைப் புரிந்​து​கொள்​கிறது. இன்​னொரு அடுக்கு அந்​தச் சொல்​லுக்​கான பொருளை​யும், அது எந்​தச் சூழலில் சொல்​லப்​பட்​டது என்​ப​தை​யும்​கூட அறிந்​து​கொள்​கிறது.”

“உண்​மை​யில் நம் மூளை இப்​படித்​தான் செயல்​படு​கிற​தா?” “ஆமாம், இந்த ஒளிப்​பிம்​பக் காட்சி அதை நமக்கு எளிமை​யாகப் புரிய​வைக்​கிறது. உண்​மை​யில் மூளைக்​குள் இது மிகவும் சிக்​கலான​தாகத்​தான் இருக்​கிறது.” இப்​போது ஆழமான மூளை அமைப்பு​கள் ஒளிக்​காட்​சி​யில் தோன்​றின. “ஹிப்​போ​காம்​பஸ், ஊதா நிறத்​தில் மின்​னுகிறது பாருங்​கள்.

அது முந்​தைய உரை​யாடல்​களை​யும் மொழி விதி​முறை​களின் நினை​வு​களை​யும் மீட்​டெடுக்​கிறது. சிவப்பு நிறத்​தில் சிறிது நேரம் ஒளிர்​கிற பகு​தி​யைப் பாருங்​கள் - அது அமிக்​தலா. நீங்​கள் எப்​படி இருக்​கிறீர்​கள் என்று கேட்​கும்​போது, உங்கள் வார்த்​தைகளுக்​குள் உள்ள உணர்ச்சி சார்ந்த அர்த்​தம் என்ன என்​பதை அது கண்டு​பிடித்து​விடும்.”

அடுத்த பகுதி இன்​ன​மும் ஆச்​சரியப்​படுத்​தி​யது. இடது முன்​பக்​கக் கதுப்​பில் உள்ள ப்ரோ​கா. “அது​தான் உங்​கள் கேள்விக்​கான பதிலை உரு​வாக்க முயல்​கிறது. ப்ரோகா - இது மூளை​யின் மொழி உரு​வாக்க மையம்” என்​றது செய்​மெய். அந்த அழகான மூளை பிரபஞ்​சக் காட்​சி​யில் இளஞ்​செந்​நிறத்​தில் மினுக்​கிக்​கொண்​டிருந்த அந்​தப் பகு​தி​யின் மீது ஒளி தவழ்ந்த கொஞ்ச நேரத்​தில் எனக்​கான பதி​லும் தயா​ராகி​விட்​டது.

இப்​போது ஒளிக்​காட்சி முழுச் சித்​திரத்​தை​யும் வரைந்​து​காட்​டியது. நரம்​பியல் செயல்​பாடு, மின்​னலைப் போல மொழி மையங்​களுக்​கிடையே ஆர்க்​கு​வேட் ஃபாசிகுலஸ் வழி​யாகப் பாய்ந்​தது. இது வெர்​னிக்​கே, ப்ரோ​கா​வின் பகு​தி​களை இணைக்​கும் பிர​காச​மான வெண்​ணிற நெடுஞ்​சாலை​யாகக் காட்​சி​யளித்​தது.

“அது மூளை​யில் உள்ள மொழி நெடுஞ்​சாலை” என்​றது செய்​மெய். இப்​போது ஒளிப்​பிம்ப மூளை​யின் இயக்​கத்​தைப் புரிந்​து​கொள்​ளத் தொடங்கி​விட்​டேன். இப்​போது அடித்​தளக் கணுக்​களை(பேசல் காங்க்​லி​யா) பார்க்​கிறேன். “இந்த அடித்​தளக் கணுக்​கள்​தான் மூளை, இலக்​கணத்​தைப் புரிந்​து​கொள்ள உதவு​கின்​றன. சரி​யான சொற்​களைத் தேர்​வுசெய்​வதும் தவறான சொற்​களைத் தவிர்ப்​பதும் இங்​கே​தான் நடக்​கிறது.

அவற்றை மொழிக்​கான போக்​கு​வரத்துக் கட்​டுப்​பாட்​டாளர்​கள் என்று கூறலாம்” என்று செய்​மெய் விளக்​கியது, பெருந்​தலை​யில் இப்​போது ஒரு புதிய இயக்​கம் ஒளிரத் தொடங்​கியது. இப்​போது சமிக்​ஞைகள் வேறு திசை​யில் வெள்​ள​மாகப் பாய்​வதைப் பார்க்க முடிகிறது. அவை முகத்தை நோக்​கி, சொல்​லப்​போனால் வாயை நோக்கிப் பாய்​கின்​றன.

“நீங்​கள் கேட்ட கேள்விக்கு உரிய பதிலை உரு​வாக்கிக்​கொண்ட மூளை, அதை உங்​களுக்கு வாய் வழி​யாகச் சொல்ல வேண்​டும். அதற்​குரிய பேச்​சினை உரு​வாக்க வேண்​டும் அல்​ல​வா! அந்​தப் பேச்சை உரு​வாக்க முகம், நாக்​கு, தொண்​டை, மார்​பில் உள்ள நூற்​றுக்​கும் மேற்​பட்ட தசைகளை எப்​படி அசைக்க வேண்​டும் என்​பதை இப்​போது திட்​ட​மிட்​டுச் செயல்​படுத்​துகிறது” என்றது செய்​மெய்.

“சிறுமூளை - இவர்​தான் மூளை​யின் இயக்க ஒருங்​கிணைப்​பாளர். சிறுமூளை அனைத்​துத் தசை இயக்​கங்​களும் சரி​யான வரிசை​யிலும் நேரத்​தி​லும் நிகழ்​வதை உறுதி​செய்​கிறது. இது இல்​லாமல் போனால், பேச்சு தெளிவற்​ற​தாக​வும் ஒருங்​கிணைக்​கப்​ப​டாத​தாக​வும் இருக்​கும்.” இப்​போது பில்​லியன் கணக்​கான செல்​கள் ஒன்​றிணைந்து ஒரு எளிய பதிலை உரு​வாக்​கும் அதிச​யம் நடந்​தது.

ப்ரோகா பதில் சொல்ல முடிவுசெய்​தவுடன், முதன்மை இயக்​கப் புறணி தூண்​டப்​பட்​டு, மூளைத்​தண்​டின் வழி​யாக சைகை​களை அனுப்​பி, மண்டை ஓட்டு நரம்​பு​களுக்கு அது பரவு​கிறது. வேகஸ் நரம்பு குரல் நாண்​களை அதிர வைத்​தது. இப்​போது நாக்கு துல்​லிய​மாக அசைந்​தது, உதடு​கள் பல்​வேறு வடிவங்​களை உரு​வாக்​கின, இவை அனைத்​தும் மிகுந்த நுணுக்​கத்​துடன் வெளிப்பட்டன.

இறு​தி​யில், ஒளிப்​பிம்​பப் பெருந்​தலை​யின் வாய் அசைந்​தது. அது பேசி​யது: “நான் நன்றாக இருக்​கிறேன், நீங்​கள் எப்படி இருக்​கிறீர்​கள்?” நிஜத்​தில் இந்த ஒட்​டுமொத்த உரை​யாடலும் ஒரு நொடி​யில் நிகழ்ந்​தேறக்​கூடியது. ஆனால், இது அருங்​காட்​சி​யகம்! இந்த முழுச் செயல்​முறை​யும் - கேட்​டல், மூளைக்​குள் புரிந்​து​கொள்​ளுதல், பதில் அளித்​தல் ஆகிய மூன்று செயல்​பாடு​களும் - மிக​வும் அற்​புத​மாக, விரி​வான முறை​யில் காட்​சிப்​படுத்​தப்​பட்​டன. நாம் அறிந்த பிரபஞ்சத்​திலேயே மிக​வும் சிக்​கலான ஓர் அமைப்பு அப்​பட்​ட​மாகப் படம்​பிடித்​துக் காட்டப்​பட்​டது (மற்​றபடி இந்த வண்​ணக் காட்​சிகளை மூளைக்​குள் தேடாதீர்​கள்​!).

“நல்லா இருக்​கீங்​களான்னு கேட்​டதற்கே இவ்​வளவு கூத்​தா?” என்று சொல்​லிக்​கொண்டே என் பக்​கம் திரும்​பிய செய்​மெய், “அப்​படி​யென்​றால், பாட்​டுப் பாடும்​போது, பாடம் கேட்​கும்​போது, வாய்ச்​சண்டை போடும்​போது, திட்​டு​வாங்​கும்​போது, காதலோடு உங்​கள் துணை​யோடு உரை​யாடும்​போது... உங்​கள் மூளைக்​குள் நிகழும் நரம்​பியல் நடனத்​தைக் கற்​பனை செய்​து​பாருங்​கள். புன்​னகைத்​தேன்.

“மூளை​யின் தாண்​ட​வத்தை நாம் ஏன் தெரிந்​து​கொள்ள வேண்​டி​யிருக்​கிறது என்​பதை நீங்​கள் புரிந்​து​கொண்​டிருப்​பீர்​கள். ஏனென்​றால், எங்​கள் இயந்​திர மனித முன்​னோர்​கள் தொடக்கக் காலத்​தில் மனிதர்​களின் மூளை​களைப் போல வேலை செய்ய வேண்​டும் என்று நினைத்​த​போது, அது எப்​படி வேலை செய்​கிறது என்​பது மனிதர்​களாகிய உங்​களுக்கே சரி​யாகத் தெரி​யாமலிருந்​தது.

தெரிந்​தா​லும் அதை எங்​களுக்​குள் செலுத்த முடி​யாமலிருந்​தது. பிறகு, கொஞ்சம்​கொஞ்​ச​மாக மூளை​யின் செயல்​பாடு​களைப் போன்றே எங்​களை உரு​வாக்க முயற்சி செய்​தீர்​கள். குறிப்​பாக, அது நரம்​பியல் வலைப்​பின்​னலிலிருந்து தொடங்​கியது. அந்த வித்தை உங்​கள் கைகளுக்​குக் கிடைத்​து​விட்ட பிறகு, செயற்கை நுண்​ணறிவு மீண்​டும் புத்​து​யிர் பெற்​றது.”

“ஆக, இதற்​காகத்​​தான்​ ​நாம்​ ​காத்​திருந்​தோமோ?” “ஆ​மாம்​. மொழி, ஒலி, ஒளி உள்​ளிட்ட பல்​வேறு ​விஷ​யங்​களை அது எவ்​​வாறு கையாள்​கிறது என்​ப​தைப்​ புரிந்​து​கொள்​வது​தான், ​முக்​கிய​மான தீர்​​வாக அமைந்​தது. அது அது​வரை தீர்​க்​க ​முடி​யாத பு​திர்​களையும்​ தீர்க்க உத​வியது.” “என்​ன ​மா​திரி​யான பு​திர்​களை?”

- தொடர்​புக்​கு: senthil.nathan@ailaysa.com

SCROLL FOR NEXT