சிறப்புக் கட்டுரைகள்

நேர்மை என்கிற ஒரு அபூர்வம் | நாடகப் பதிவு

Guest Author

சென்ற வாரம் கூத்துப்பட்டறையில் பிரளயன் இயக்கத்தில் நிகழ்த்தப் பட்ட ‘பட்டாங்கில் உள்ளபடி’ நாடகம் மனதை உலுக்கியது. அதையும் தாண்டி இதற்கெல்லாம் என்னதான் வழி என்கிற மூச்சுத் திணறலை உண்டாக்குகிற ஒரு படைப்பாக உணர வைக்கிறது.

இந்த நாடகத்தில் வரக்கூடிய டிஎஸ்பி கதாபாத்திரம் போன்று இந்தியா முழுமையும் தேடினாலும் நிச்சயம் கிடைக்கப் போவதில்லை. ஒரு வேளை நேர்மையான தனிமனிதர்கள் இருக்கலாம். ஆனால், ஒரு சாதிய அதிகார சமூக பரப்பில் அப்படி ஒரு நேர்மையாளர் சாத்தியமா? என்று கேள்வி எழுப்புகிறது இந்நாடகம்.

தன் கணவனை சாதி பெயரைச் சொல்லித் திட்டிக் கட்டையால் தாக்கியதாகவும் அதைத் தடுக்கப்போன தன்னையும் தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் தருகிறார்.

அப்படிப் புகார் தந்ததற்காக, அவர்களது வாய் பேச முடியாத மகன் வழிமறித்து தாக்கப்பட, தங்களின் உயிருக்கு அஞ்சி தாக்கப்பட்ட மகனுடன் மீண்டும் காவல் நிலையத்திற்கு அந்த அப்பாவி பெண் வருகிறார். ஆனால், வழக்கை முறையாகப் பதியாமல் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக காவல் நிலையத்திலுள்ளோர் செயல்படுகிறார்கள். அப்போது அங்கு வரும் நேர்மையான அதிகாரி முறையாக வழக்குபதிவு செய்ய உத்தரவிடுகிறார். ‘பிணத்தைப் பொது வழியில் எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் சிலர் தடுக்கிறார்கள்’ என்ற குரலுடன் புகார் வர, நேர்மையான அதிகாரி பிண ஊர்வலத்தைத் தடுக்கும் ஆட்களிடம் சட்டம் குறித்துப் பேசுகிறார். பார்வையாளர்களுக்கு இப்படியொரு அதிகாரி இருந்து விடமாட்டாரா என்ற ஏக்கத்தை உண்டாக்குவதே இந்த நாடகத்தின் வெற்றி! - கரன் கார்க்கி, எழுத்தாளர்

SCROLL FOR NEXT